நுவரெலியா பிரதேச இணைப்புக்குழு இணைத் தலைவர்களாக அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் , பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிகமாக மத்திய மாகாண பிரதிச் சபை முதல்வர் எஸ்.பி.இரத்நாயக்கவும் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளு உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு மாகண சபை உறுப்பினர் பியசிறியை நியமித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களை மாகாகண சபை உறுப்பினர் சக்திவேலுக்கு மாற்றியிருந்தார்.
இந்த நிலையில் நுவரெலியா பிரதேச இணைப்புக்குழு தலைவராக செயற்பட்டு வந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தனது பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை பிரேரித்திருந்தார்.அதற்கமைவாக நுவரெலியா பிரதேச இணைப்புக்குழு இணைத்தலைவராக எம்.திலகராஜ் எம்.பியை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மு. இராமச்சந்திரன் – தலவாக்கலை கேதீஸ்