நுவரெலியா பிரதேச சபை இ.தொ.கா வசம் – தலைவராக வேலு யோகராஜா!!

0
133

நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கந்தபளை பிரதேச செயலக காரியாலயத்தில் 29.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.பிரதேச சபையின் தலைவராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவான வேலு யோகராஜாவும், உப தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு தெரிவான கே.பீ.வி. சரத்குமாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர், உப தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.

இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவான வேலு யோகராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ருவன் சம்பத் அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் 12 வாக்குகளைப் பெற்று வேலு யோகராஜா அவர்கள் தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட ருவன் சம்பத் அவர்களுக்கு 9 வாக்குகளே பெறமுடிந்தது.

இதேவேளை உபதலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு தெரிவான கே.பீ.வி. சரத்குமார அவர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஆர்.தமிழ்செல்வன் அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் கே.பீ.வி. சரத்குமார 12 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட ஆர்.தமிழ்செல்வன் 9 வாக்குகளே பெறமுடிந்தது.

20180329_105225 20180329_110344 20180329_110845

23 உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலியா பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினர் கூட்டத்திற்கு கால தாமதமாகவே கூட்டத்திற்கு சமூகமளித்ததால் தலைவர் தெரிவிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதேவேளை இக்கூட்டத்திற்கு சமூகமளித்த மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.

நுவரெலியா பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 09 ஆசனங்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 07 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 05 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 01 ஆசனமும், ஐக்கிய மக்கள் கட்சிக்கு 01 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.

 

(க.கிஷாந்தன்-டி.சந்த்ரு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here