இன்று காலை அட்டனில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற அட்டன் டிப்போவிற்கு சொந்தமான பேருந்து பிளக் பூல் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் நான்குபேர் சிறு காயங்களுக்குட்பட்டுள்ளனர். இவ்விபத்தானது இன்று காலை 10 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது சாரதியின் தூக்கமே விபத்துக்குக் காரணம் என் பஸ் சாரதியே ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த பேருந்தானது அட்டனிலிருந்து 8 மணிக்கு புறப்பட்டதோடு மிகவும் மெதுவாகவே பயணித்ததுடன் பத்தனை, லிந்துல ஆகிய இடங்களில் 15 நிமிடங்களுக்கு மேல் தரித்து நின்றதாகவும் பயணி ஒருவர் தெரிவித்தார் விபத்து நேர்ந்த போது பேருந்தானது வழமையான திசையில் பயணிக்காது வடிகாணில் விழுந்து சுமார் 15 அடி வரை இழுத்துச் சென்று ஒரு கொன்கிரீட் கல்மீது மோதி நின்றதாக பயணிகள் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து தினமும் கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு சேவையில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜீவன்