நுவரெலியா மாநகர சபையினரால் வழங்கப்படும் குழாய் குடிநீர் நூறு வீதம் சுத்தமானதாக இல்லை; அமைச்சர் ராதா!

0
119

நுவரெலியா மாநகர சபையினரால் வழங்கப்படும் குழாய் குடிநீர் நூற்றுக்கு நூறு வீதம் சுத்தமானதாக இல்லை. என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அமைச்சர் வே.இராதாகிருஸணன் தொடர்ந்து உரையாற்றுகையில். கடந்த பல மாதங்களாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் வாழும் பொது மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகின்றார்கள்.

நுவரெலியா மாநகர சபையும் நீர் வழங்கள் திணைக்களமும் இணைந்து நுவரெலியா வாழ் பொது மக்களுக்கும் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அசுத்தமான நீரை தொடர்ந்து பருகுவதால் நோய்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

எனவே மனித அபிமானதோடு மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நுவரெலியா வெளிமட வீதியில் காமினி தேசிய கல்லூரிக்கு அருகாமையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த ஒருவரின் காணியை நுவரெலியா மாநகர சபை சுவிகரித்து அந்த காணியில் குடியிருந்தவருக்கு கொள்கலன் (கென்டர்) அமைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் சம்பந்தபட்டவருக்கு அந்த இடத்தை வழங்காமல் இருப்பது கலலைக்குறிய விடயமாகும். இதே வேலை தர்மபால சந்திக்கு அருகில் கொள்கலன் (கென்டர்) ழூலம் வியாபாரம் செய்து வந்தவருக்கு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் விடுதிக்கு அருகில் வியாபாரம் நடாத்துவதற்கு காணி வழங்கபட்டள்ளது. அப்படி என்றால் பாதிக்கபட்டவருக்கும் அனுமதி வழங்கபட வேண்டும் என்று கூறினார்.

இக் கூட்டத்தில்.பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ்¸கே.கே.பியதாச உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம்¸ சோ.சிறிதரன்¸ ஜி.எம்.எம். பியசிரி¸ எஸ்.பி.ரத்னாயக்க உட்பட நுவரெலியா மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பா .திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here