நுவரெலியா மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் ரூபா 500 இற்கு பெருமதியான பொருட்கள் கொள்வனவு செய்தால் மாத்திரமே சீனி ஒரு கிலோ வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சதொச நிலையத்தில் சீனி ஒரு கிலோ ரூபா 87 இற்கு விற்பனை செய்கின்ற போதும் ஏனைய வர்த்தக நிலையங்களில் 110 ரூபாய் முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இதுதொடர்பில் சதொச நிலைய அதிகாரியிடன் வினவிய போது,
வாடிக்கையாளர்கள் 87 ரூபாய்க்கு சீனியை பெற்று ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்வதானாலே எமது உயர் அதிகாரின் அனுமதியை பெற்று 500 ரூபா பெருமதியான பொருட்கொள்வனவு செய்வேருக்கு மாத்திரம் சீனி விற்பனை செய்வதாக தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழம் சாதாரன வர்க்கத்தினர் குறைந்த விலையில் சீனியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், எமக்கு சீனியை வழங்க மறுக்கும் சதொச நிலைங்களிலிருந்து தனியார் வர்த்தக நிலைங்களுக்கு மொத்த விற்பனையில் சீனி விற்பனை செய்வதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்