நாளையதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பில் நுவரெலியா மாவட்டத்தில் 19,729 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா, மஸ்கெலியா, கொத்மலை,வலப்பனை,ஹங்குராங்கெத்த, ஆகிய தேர்தல் தொகுதியில் உள்ள 204 தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்து, அந்தந்த நிலையங்களில் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பான முறையில் நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில், நாளையதினம் இம்மாவட்டத்தில் வாக்களிக்க முடியாதோர் எதிர்வரும் 11ம், 12ம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.