நுவரெலியா மாவட்டத்தில் சகல சபைகளையும் ஐ.தே.கட்சியே வெற்றிக்கொள்ளும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

0
154

நுவரெலியா மாவட்டத்தில் சகல சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிக்கொள்ளும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிக் கொள்ளும் என்பதற்கு அட்டன் டன்பார் கூட்டம் சான்றாகிறது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எமது செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை உறுதி படுத்தியுள்ளீர்கள்.

நாம் வெளிமாவட்டங்களிலிருந்து இந்தக்கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கவில்லை. எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் எமது மக்களுக்குச் சிறந்த சேவை செய்து வருவதால் இன்று சிந்திக்க தெரிந்த மக்கள் எம்மோடு உள்ளனர்.

 

27459833_1701975963157007_3070060881881303104_n

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியையும் பிரதம மந்திரியையும் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெறச்செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டனர் என்பதை இலகுவில் யாரும் மறந்து விடமுடியாது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துவதில் எமது கூட்டணி தலைவர்கள் முனைப்புடன் செயற்பட்டனர். எனவே எதிர்வரும் தேர்தலில் இந்தப் பிரதேச சபைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து வெற்றிக்கொள்ளும். மலையகத்தில் எமது வெற்றிப்பயணம் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here