மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மைலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 21.08.2018 அதிகாலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதுடன் நோட்டன் விமலசுரேந்திர நீர் தேக்கத்திலும் நீர் நிறம்பி வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொசல்கமுவ ஓயா. டிக்கோயா ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதுடன் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் அதிகளவில் நீர் வழிந்தோடுகின்றது.
மழையுடன் கூடிய பணி முட்டம் நிறைந்த கால நிலையில் அட்டன் கொழும்பு வீதியில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது பிரதான பாதைகளில் மழை நீர் அடித்துச்செல்வதனால் பாதையில் வலுக்கல் தன்மை காணப்படுவதாகவும் வாகண சாரதிகள் அவதானத்துடன் வாகணத்தை செலுத்துமாறும் வேண்டு கோள் விடுக்கின்றனர் மேலும் அதிக மழையினால் நீரேந்தும் பகுதிகளில் குடியிருப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்