இலங்கை அரச நிதி கணக்காய்வாளர் சங்கம் மற்றும் இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனம் என்பன இணைந்து நடாத்திய 2020 ஆம் ஆண்டுக்கான சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த கணக்காய்வு அறிக்கை மற்றும் கணக்கு விபரங்களுக்கான விருதினை நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை பிரதேச சபை பெற்றுக் கொண்டது.
2020ம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட கணக்காய்வில் எவ்வித குறைபாடுகளோ அல்லது எவ்வித பிரச்சனைகளோ இன்றி அனைத்து கணக்குகளும் திறம்ட இருத்தையொட்டி கொட்டகலை பிரதேச சபைக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் குறிப்பிடுகையில் இந்த விருதினை பெறுவதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்த கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு. நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு மட்டுமே இவ்விருது கிடைக்கபெற்றதையிட்டு பெருமிதம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்