நுவரெலியா மாவட்டம் முழுவதும் பணிபுறக்கனிப்பு மேற்கொள்ளபடவிருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை!!

0
105

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை அச்சுருத்தியவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால் நுவரெலியா மாவட்டம் முழுவதும் பணிபுறக்கனிப்பு மேற்கொள்ளபடவிருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை

கடந்த 16.03.2018. வெள்ளிகிழமை இரவு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற சிலர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரை தகாதவார்தையில் கடுமையாக பேசியதன் காரணமாக அச்சுருத்தல் விடுக்கபட்டமைக்கு எதிராக நேற்றும் இன்றும் பணிபுறக்கனிப்பில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஏணைய உத்தியோகத்தர்கள் பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

கொட்டகலையில் இருந்து திம்புள்ள பத்தனையை பகுதியை நோக்கி பயனித்த வேன் ஒன்றில் மோதுண்டு காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போதே குறித்த வைத்தியர் அச்சுருத்தபட்டதாக பொலிஸ் நிலையத்தில் பதிய பட்டுள்ள முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் என கூறி கொண்டு வந்தவர்கள் காயமடைந்தவருக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்க வில்லையென தெரிவித்தே குறித்த மரண அச்சுருத்தல் விடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந் நிலையில் சந்தேகத்துக்குறியவர்களை கைது செய்ய வழியுருத்தி இரண்டாவது நாளாகவும் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here