நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளை அதிகரிக்க அரசு பச்சைக்கொடி; அமைச்சர் மனோ தெரிவிப்பு!

0
136

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. சற்று முன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.

இன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார். இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் சற்று முன்னர் நாம் கையளித்தோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ, அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், மற்றும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் போன்றோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here