நுவரெலியா மாவட்ட பிரதேசசபை அதிகரிப்பு தொடர்பான வரைபை இதொகா கையளித்தது!

0
99

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது அமைந்துள்ள 5 பிரதேசசபைளை 12 ஆக அதிகரிக்கும் வகையில் முன்மொழிவுகளை மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அண்மையில் இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதன்போது, இ.தொ.கா தலைவரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஷ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் ஏ.பிலிப்குமார் ஆகியோர் கலந்து கொண்டதையும் இப்படத்தில் காணலாம்.

குறிப்பாக, முன்மொழிவுக்கான பிரதேசசபைகளாவன நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை, அம்பேகமுவ, நோர்வூட், மஸ்கெலியா, வலப்பன, ராகலை, கொத்மலை, திஸ்பன, அக்குராங்கெத்த, மத்துரட்ட என்பவையாகும்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here