நுவரெலியா மாவட்டத்தில் பசும்பால் உற்பத்தியினை மேம்படுத்துவதற்கு 19 மிருக வைத்தியர்களினதும்,89 அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்;களினதும் ஆளணி தேவை காணப்படுவதாக மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர்.குமுதினி ராஜநாயக்க, தெரிவித்தார்.
பொகவந்தலா மஸ்கெலியா அக்கரபத்தனை உள்ளிட்ட பிரதேசங்களில் பால் உற்பத்தியில் ஈடுபடும் பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக புற்தரிக்கும் இயந்திரம் ,பால் கரக்கும் இயந்திரம்,குளிரூட்டிகள் சீலர், தள்ளுவண்டி, மண்வெட்டி, உள்ளிட்ட சுமார் 20 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டடில் பொகவந்தலா தோட்ட விளையாட்டு கழக மண்டபத்தில் நேற்று (17) மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஹட்டன் பொவந்தலா அக்கரபத்தனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பசும்பால் உற்பத்தியில் ஈடுபடும் பலர் உள்ளனர் நாட்டில் பசும்பால் உற்பத்திக்கு தேவையான வளங்கள் நிறைந்த மிகப்பொருத்தமான மாவட்டமாக நுவரெலியா மாவட்டமே காணப்படுகின்றன.இதனால் இத்துறையினை மேம்படுத்துவதற்காக கடந்த 2021 ஆண்டு மாகாண அமைச்சின் உடாக 6.9 மில்லியன் ரூபாய்களும் திணைக்களத்திலிருந்து 7.9 மில்லியன் ரூபாய்களும் கிடைக்கப்பெற்றன.
இந்த பால் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக இந்த வருடம் ஆரம்பிக்கும் போதே எமக்கு ஓர் எதிர்ப்பார்ப்பிருந்தது 05 பசுக்களுக்கு மேல் வைத்திருக்கு ஒவ்வொருவருக்கு புற்தரிக்கும் இயந்திரம் ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அதற்கமைய இதுவரை நாங்கள் 91 புற்தரிக்கும் இயந்திரங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
ஆனால் எம்மிடம் உள்ள கரவைப்பசுக்களில் 20 தொடக்கம் 25 வீற்றர் பால் கரக்கக்கூடிய பசுக்கள் காணப்பட்ட போதிலும் அவற்றில் இருந்து சுமார் 8 தொடக்கம் 10 லீற்றர் பால் வரையே கரக்கப்படுகின்றன இவற்றிக்கு பிரதான காரணம் அவற்றிக்கு தேவையான போதுமான போசனையுடனான உணவு வழங்கப்படுவதில்லை.
பால் உற்பத்தியாளர்கள் மிகவும் கஸ்ட்டப்பட்டு புற்களை அறுத்து கொண்டு கொடுத்த போதிலும் அவற்றை அவை விரும்பி உண்பதற்கு ஏற்ற வகையில் கொடுக்காததன் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளன. பால் பண்ணையாளர்களை தெளிவு படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொடுப்பதற்கோ எம்மிடம் தேவையான அளவு மிருக வைத்தியர்களோ அல்லது அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களோ இல்லை இதனால் இன்று கடமை புரிபவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம் ரமேஸ்வரன் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி, கால்நடை வைத்தியர்களான பி.எம் விக்கிரமநாயக்க, ஜே,தவராஜா, சுரேஸ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்