நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தரம் 01 முதல் 05 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது.
கட்டிடம் தற்போது ஆபத்தான நிலைக்காணப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது.
பாடசாலை கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பாக நுவரெலியா வலய கல்வி அதிகாரிகளிடமும் ஹோல்புறூக் கோட்டம் 03 பணிப்பாளர் அவரின் கவனத்திற்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பாடசாலைக்கு புதிய கட்டிடத்தினை அமைத்துக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)