இம்முறை வெளிவந்த கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் நூறு வீதமான வெற்றியை ஹட்டன் கல்வி வலயத்தில் பெற்று வரலாற்று சாதனை படைத்த செனன் தமிழ் மகா வித்தியாலயம்.இம்முறை இடம் பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 52 மாணவர்களும் உயர்தரத்துக்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இவர்களில் சிறப்பு சித்திப்பெற்ற செல்வி யோகேஸ்வரன் நிதுஷா,8A,1C எனும் பெறுபேற்றுடன் வித்தியாலயத்தின் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது.
நூறு வீதமான இப்பெறுபேறு செனன் பாடசாலையின் வரலாற்றில் முதல் சந்தர்ப்பமாகும்.