நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோயால் உயிரிழப்பு!

0
86

நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோய் காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது 43வது வயதில் ஜோலேகா மண்டேலா உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஜோலேகா மண்டேலா நேற்று (26) காலமானதாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.மேலும், நெல்சன் மண்டேலா அறக்கட்டளை நேற்று காலை ஒரு அறிக்கையில், ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு “மண்டேலா குடும்பத்தினருக்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியது.

எம்.ஜே.சீகமேலா மற்றும் சிண்டி மண்டேலா ஆகியோருக்கு 1983 ஏப்ரல் 9ல் மகளாக ஜோலேகா மண்டேலா பிறந்தார்.ஜோலேகா மண்டேலா ஒரு எழுத்தாளராக திகழ்ந்ததோடு தனது வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவராவார்.

மேலும், ஜோலேகா மண்டேலா தனது இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here