நோர்வுட் விளையாட்டு மைதானம் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தம் மன்றத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திலிருந்து பிரித்து நோர்வுட் பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த நடவடிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு பாரிய சேவையாற்றிய மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் பாராளுமன்றத்தால் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மன்றத்தின் கீழ் அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், ரம்பொட தொண்டமான் கலாச்சார மையம், மற்றும் நோர்வுட் தொண்டமான் விளையாட்டரங்கு என்பன இயங்கி வருகின்றன.
இன் நிறுவனங்களை நடத்துவதற்கான நிதி நேரடியாக அரசாங்க திறைச்சேரி மூலம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்புகளின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மலையக இளைஞர் யுவதிகள் பயனடைந்து வருகின்றனர்.
வருவதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிகிறது. இவ்வாறான நடவடிக்கை பாரிய உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.
மலையக மக்கள் கட்சிகளின் கடந்து சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நேசிக்கின்றனர். அவரின் சேவைகள் மலையக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதனால் அவருடைய பெயரில் இயங்குகின்ற எந்த ஒரு நிறுவனத்தையும் பெயர் மாற்றம் செய்யவோ, அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைப்பதையோ மலையக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கடந்த காலங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை பெயர் மாற்றம் செய்ய முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது மலையகத்தில் பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பியது. அத்துடன் சர்வதேச மட்டத்திலும் இதற்காக கண்டன குரல் எழுப்பப்பட்டதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
நோர்வுட் தொண்டமான் விளையாட்டரங்கை தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திலிருந்து பிரித்து நோர்வுட் பிரதேச சபையுடன் இணைக்கும் முயற்சியை மலையக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் அரசாங்கம் நோர்வுட் விளையாட்டு மைதானத்தை நோ ரூட் பிரதேச சபையுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். எனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.