நோர்வூட் தியசிறிகமயில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த கார்!

0
99

நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் கவிழ்ந்ததில் பெண் ஒருவரும் மற்றுமொரு ஆணும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29.06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here