நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆஜராகிய 14பேர் விடுதலை!!

0
109

இ.தொ.கா.மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் அட்டன் நீதி மன்றில் ஆஜராகிய 14பேருக்கு ஒரு இலட்ச்சம் ரூபா சரிபினையில் விடுதலை

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் நீதிமன்றில் ஆஜராகவில்லை

இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்களுக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் கடந்த 28ம் திகதி புதன் கிழமை நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 11.04.2018. புதன் கிழமை காலை அட்டன் நீதிமன்ற நீதவான் டி. சரவனராஜா முன்னிலையில் ஆஜராகிய போது இரு தரப்பினருக்கும் ஒரு இலட்ச்சம் ரூபா சரிரபிணையில் விடுதலை செய்யபட்டுள்ளனர் .

கடந்த மாதம் 28ம் திகதி நோர்வூட் பகுதியில் இரு குழுக்கலுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான பாலகிருஸ்னண் சிவநேசன் , மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் அலேக்சான்டர் ஆகிய குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தனர் .

இதேவேலை நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பாலகிருஸ்னண் சிவநேசனால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜிக்கு எதிராக நோர்வூட் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய 11.04.2018.புதன் கிழமை அட்டன் நீதவான் நீதி மன்றில் ஆஜராகவில்லையென நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here