நீண்ட நாட்களுக்கு பின் நோர்வூட் பகுதிக்கு வீட்டு சமையல் எரிவாயு இன்று (03) விநியோகம் செய்யப்பட்டன.
இந்த எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்;.இந்நிலையில் காத்திருந்த மக்கள் ஒரு சிலருக்கு சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் முகவர் எரிவாயு சிலிண்டர் முடிந்து விட்டது. என்று தெரிவித்தனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து எரிவாயு பாவனையாளர்கள் சிலிண்டர்களை வீதியின் குறுக்கே வைத்து குறித்த எரிவாயு விற்பனை முகவருக்கு 40 சிலிண்டர்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அதில் ஒரு சிலவற்றை பதுக்கி வைத்துள்ளார்.
அதனை பெற்றுத்தர வேண்டும் கோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
அதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு பதுக்கி வகை;கப்பட்டிருந்த ஒரு சில சிலிண்டர்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு நடவடக்கை கைவிட்டன.
மலைவாஞ்ஞன்