பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் நோர்வூட் பிரதேசசபையின் அனுமதியினை பெறாது அமைக்கபட்ட கடைகளை அகற்றுவதற்கு சென்ற நோர்வூட் பிரதேசசபையின் உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.24.05.2018 வியாழகிழமை காலை 11.30 மணி அளவில் நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகள் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு வருகை தந்து மேற்பரீசிலனை ஒன்றை மேற்கொண்ட போது சில வர்த்தக நிலையங்கள் நோர்வூட் பிரதேசசபையின் அனுமதினை பெறாது அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்ட போதே பொகவந்தலாவ பிரதேசமக்களுக்கும் நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகளுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
மேலும் பொகவந்தலாவ நகரில் இரண்டு பொது மலசல கூடங்களும் நீண்டகாலமாக மூடப்பட்டு கிடப்பதாகவும் இதனால் நாளாந்த பொகவந்தலாவ நகரத்திற்கு வருகின்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கவதாக இந்த அமைதியின்மையின் போது மக்கள் நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
எனவே இதற்கான நடவடிக்கையினை வெகுவிரைவில் மேற்கொள்ளவிருப்பதாகவும் நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸாரின் தலையீட்டினை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)