பங்களாதேஷில் சீரற்ற வானிலை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வட பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பஙகளாதேஷ் வெள்ள அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடாக காணப்பட்ட போதிலும், காலநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களில் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்த 21 பேரும் உள்ளடங்குவதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்தியாவின் வட பகுதியிலுள்ள Meghalaya, Assam மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களும் மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.