கடந்த காலத்தில் இலங்கையின் ஆட்சி அமைத்த இரண்டு பெரும் கட்சிகளான ஐ.தே.க, ஐ.ம.சு.க என்பன மலையகத்தை சேர்நத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும்,வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தம் ஆட்சியின் பெரும்பான்மைக்காக இணைத்துக்கொண்டு செயற்ப்பட்ட சந்தர்பங்களிள் அப்பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் ஆலோசணைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.கடந்த காலங்களிள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அக்கட்சியுடன் இணைந்து செயற்ப்பட்ட அமரர்களான கௌரவ.சௌமியமூர்த்தி தொண்டமான்,கௌரவ.பெ.சந்திரசேகரன்,கௌரவ.வேலாயுதம் ஆகியோரின் கருத்துக்களிற்கும் ஆலோசணைகளுக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையை வழங்கப்பட்டுள்ளது.இதனை அமரர்.கௌரவ.வேலாயுதம் அவர்கள் தொலைகாட்சி விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
அதே போன்று ஐ.ம.சு.கட்சியின் ஆட்சியில் அக்கட்சியுடன் கூட்டனி சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்,ஆலோசணைகளுக்கு முக்கியதுவமும் முன்னுரிமையை வழங்கப்பட்டது.
இவ்வாறு இரு கட்சிகள் தனி தனியே ஆட்சி நடாத்திய போது தமிழ் மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட அனைத்துவிதமான செயற்பாடுகள்,திட்டங்கள்,அமைச்சரவை நடவடிக்கைகள் என அனைத்திற்கும் மக்கள் சார்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் ஆலோசணைகளும் முன்மொழியப்பட்டு பரிசிலிக்கப்பட்டு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால் இருகட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் இன்றைய நல்லாட்சியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா என்ற சந்தேகம் ஏறப்படுகின்றது.அதிலும் நல்லாட்சியை உருவாக்கியதாகவும் நல்லாட்சியின் பங்காளிகள் எனவும் மார்தட்டிக்கொள்ளும் தமிழ் முற்போக்கு கூட்டனி நல்லாட்சியினாலு கண்டுக்கொள்ளப்படுவது இல்லையோ என தோன்ற செய்கின்றது.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சி பதவி நியமனத்தின் போது இந்துவிவகார அமைச்சி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டத்தில் இருந்து தெளிவாக தெரிகின்றது,எமது தமிழ் உறுப்பினர்கள் எவ்வாறு கணக்கெடுக்கப்படுகின்றனர் என.பேரம் பேசும் சக்தியோ,அழுத்தம் பிரயோகிக்கும் சக்தியோ இன்றி வெறுமனே தமது சலுகைகளை பெற்றுக்கொள்ள மாத்திரமே நல்லாடசியில் அங்கம் வகிகின்றனர்.
இவ்வாறு எம் உரிமைகளை தாரைவார்த்துக்கொடுக்கும் நல்லட்சியின் பங்காளி த.மு.கூட்டனியினரே நீங்கள் எவ்வாறு மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்?
உங்களுக்கு என்ன பலம்? என்ன சக்தி உள்ளது?
இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு ஆறுதலுக்காக வழங்கிய அதிகாரமற்ற அமைச்சை பாதுகாக்க நல்லாட்சியின் துரோகங்களை தாங்கிக்கொண்டு காலத்தை கடத்துங்கள்..
குலசேகர் லீபன்