பசில் ராஜபக்ஷவுக்காக உயர்நீதிமன்றில் பிணை மனுத்தாக்கல்!

0
136

தற்போது சிறைவாசம் உள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு பிணை வழங்குமாறு கோரி அவரது சட்டத்தரணியினால் கொழும்பு உயர்நீதிமன்றில் பிணை மனுவொன்று இன்றையதினம்(22) முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் 29 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும், ஆனால், சிறைச்சாலையில் உள்ள பசில் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாக அவரது சட்டதரணி உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் மாதம் ஒத்திவைப்பதாக நீதிபதி பத்மினி என்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் 29 மில்லியன் நிதி மோசடி செய்தமை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 50 இலட்சம் பெறுமதியான கலண்டர்களை அச்சிட்டமை தொடர்பில் பசில் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த வழக்குடன் தொடர்புடைய திவிநெகும திட்டத்தின் பணிப்பாளர் கித்சிரி ரணவக்கவும் தற்போது சிறையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here