பச்சிளம் குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

0
112

உத்தர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை 13 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருக்கு ஒரு வயதில் ரீத்து என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை சில தினங்கள் முன்னதாக வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பள்ளியின் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தையின் காலில் செங்கல் கட்டப்பட்டிருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பலரிடம் விசாரித்தபோது 13 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசியுள்ளான். இதுகுறித்து சிறுவனை மேலும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.

சில நாட்கள் முன்னதாக அந்த சிறுவன் தனது சைக்கிளை கேசவ் ராகுல் வீட்டருகே நிறுத்தியுள்ளான். அதற்காக கேசவ் ராகுல் சிறுவனை அடித்ததுடன், கேவலமாக திட்டியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கேசவ்வை பழி வாங்க அவரது குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றதாக கூறியுள்ளான்.

இதையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here