பச்சையரிசி மற்றும் தேங்காய் விலைகளை குறைக்க அரசிடம் கோரிக்கை!

0
17

தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(08.01.2025) உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது.இதேவேளை ஒருகிலோகிராம் பச்சையரிசியை 280 அல்லது 290 ரூபா என்ற அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது

எனவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள்.துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள்,பேருந்து,முச்சக்கரவண்டி சாரதிகள், இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர். எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here