வெளிநாட்டு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலின் கண்காணிப்புப் பெட்டி இன்று மாலை ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 24 முதல் 29 வரை படப்பிடிப்பிற்காக ஆறு பெட்டிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ரயிலின் சில பகுதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நோக்கிச் செல்லும் போது பெட்டி தடம் புரண்டது.
இந்த தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.