பண்டாரவளை – வெலிமட , டயரபா சந்தியில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் பங்கேற்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீது இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணயின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் குழுவால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அவர்களின் தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் மேல் மாடியில் இருந்து போத்தல் மற்றும் கற்கலால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் , பின்னர் இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் எற்பட்டுள்ளது.
இதன்போது , காயமடைந்த 5 பேரும் வெலிமட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிமட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.