பதுளை மாவட்ட ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள், படைப்பிலக்கியவாதிகள் ஆரம்பநிலை எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் சமூக மாற்றம் தொழில் ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராய வேண்டி இம்மாதம் 30ம் (சனிக்கிழமை) திகதி பண்டாரவளை சென் தோமஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் முழுப்பயிற்சிப் பட்டறைக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப் பட்டறை பண்டாரவளை சென் தோமஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி இடம்பெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையில் பங்கு பற்றுனர்களுக்கு சான்றிதழ்களும், பயிற்சிப்பபட்டறை பயன்பாட்டுக்கான உபகரணங்களும் வழங்கப்படும்.
பங்கு பற்றுனர்கள் தமது கருத்தியல்களை பதிவு செய்ய போதிய கால அவகாசம் கொடுக்கப்படவுள்ளமை சிறப்பம்ஷம் என சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.
பங்குபற்றுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களுக்கான முடிவு திகதி 25.09.2017 ஆகும். விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேலதிக விபரங்களுக்கு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், 368/ 6 பௌத்தலோக மாவத்தை, கொழும்பு-07 தொலைநகல் 011 2671721 மின்னஞ்சல் உழஅஅரniஉயவழைn ளூ nஉஉளடழசப தேவதாஸ் சவரிமுத்து 071 6876548 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என இம்மன்றம் மேலும் கேட்டுள்ளது.
ஊடகப்பிரிவு
இதொகா