பண்டிகையை ஒட்டி திடீரென பச்சை நிறமாக மாறிய ஆறு! குவியும் மக்கள்

0
110

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ என்னும் ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும் வகையில், வருட வருடம் மார்ச் 17ல் புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த கொண்டாட்டத்தின்போது, இங்குள்ள மக்கள் பச்சை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிகாகோ நகரில் பாயும் சிகாகோ ஆற்றை பச்சை நிறமாக மாற்றும் பணி நேற்று நடந்தது.

பெரிய படகுகளில் எடுத்து வரப்பட்ட மோட்டார்கள் வாயிலாக பச்சை நிற சாயம் ஆற்றில் கலக்கப்பட்டது. பச்சையாக மாறியுள்ள சிகாகோ ஆற்றை காண, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் ஆர்வமுடன் இங்கு குவிந்து வருகின்றனர்.

வண்ணமயமாக மாறிய ஆற்றைக் காண வந்தவர்கள், தங்கள் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு பச்சை நிறம் பூசி மகிழ்ந்தனர்.

கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஆற்றில் பச்சை சாயம் பூசுவது நடந்து வரும் சூழலில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக புனித பாட்ரிக் தினக் கொண்டாட்டம் தடைபட்டு, ஆற்றில் சாயம் கலப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சாயம் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஆற்றை பச்சை நிறமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here