தனக்கு எதிராக பாராளுமன்ற கோப் குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடையும் வரை தனது பதவிக்காலம் நீடிக்கப்படுவதை எதிர்பார்ப்பதில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் இம்மாதம் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக கோப் குழுவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பிணைமுறி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற முறைகேட்டினால் இலங்கை மத்திய வங்கிக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
இதன் காரணமாக அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலத்தை தொடர்ந்து நீடிக்க கூடாது என்று எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே தனக்கெதிரான விசாரணைகள் நிறைவுறும் வரையில் சேவை நீடிப்பை எதிர்பார்ப்பதில்லை என்று நிதிச் சபைக்கு அர்ஜுன மஹேந்திரன் அறிவித்துள்ளார்.