பதுளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் பலி!!

0
144

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயம்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.15.04.2018 அன்று மாலை 06.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ELLA ACCIDENT 02 ELLA ACCIDENT

குறித்த தந்தையினால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here