பதுளை – கன்தேகெடிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்தவர்கள் என சந்தேகத்தின் பெயரில் மூன்று பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மற்றும் பிபில பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் வசம் இருந்து, கைப்பேசிகள் மற்றும் 200 மில்லியன் பணத் தொகை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் இருப்பதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் பதுளை பொலிஸார் கூறியுள்ளனர்.