பதுளை – பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தில் தங்கியிருந்த உரிமையாளர், அவருடைய சகோதரி மற்றும் அவரின் சிற்றன்னையாகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.