பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து மட்டு

0
28

பதுளை – பிபில வீதியில் 143 மற்றும் 144 ஆவது கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (25) காலை 6.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த வீதி போக்குவரத்துக்காக திறக்கப்படும் எனவும், மாலை 6.00 மணி முதல் நாளை (26) காலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 18ம் திகதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் நேற்று (24) அந்த இடத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் பார்வையிட்டார்.

நிலவும் காலநிலைக்கு ஏற்ப வீதியின் திறக்கும் நேரம் மாறலாம் எனவும், குறித்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக பசறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here