திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் உயிருடன் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு 09.03.2018 அன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுத்தைக் குட்டிகள் 09.03.2018 அன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதைக் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவர்கள் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைகாலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில் 09.03.2018 அன்றைய தினம் சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)