பத்தனையில் கனரக வாகனம் விபத்து; சாரதியும் உதவியாளரும் காயம்!

0
99

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் 09.02.2018 அன்று காலை 11 மணியளவில் கனரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

IMG-20180209-WA0013IMG-20180209-WA0011

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து தேயிலை தூள் பக்கட்களை ஏற்றி கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகன சாரதியின் கவனயீனம் காரணமாக, சாரதிக்கு குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here