பத்தனையில் குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் நிலையத்தை மாற்ற மக்கள் கோரிக்கை!

0
156

திம்புள்ள பத்தனை பகுதியில் தின்மக்கழிவுகளினால் பசளை தயாரிக்கும் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

நுவரெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பசளைத்தயாரிப்பு நிலையத்தை அன்மித்த திம்புள்ள நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்
நுளம்பு மற்றும் ஈக்கள் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

0302

மேலும் கடந்த காலங்களில் நுவரெலியா பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளே குறித்தப்பகுதியில் கொட்டப்பட்டதாகவும் தற்போது வெளியிடங்களிலுள்ள கழிவுகளும் கொட்டப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

நடாளவிய ரீதியில் டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறுவகையான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதிகளவில் மக்கள் வாழும் திம்புள்ள பத்தனை தின்மகழிவு பசளை தாயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here