பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில் டிப்பர் லொறி விபத்து – மூவர் படுகாயம்!

0
124

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை (சாணம்) ஏற்றிச்சென்ற லொறி குயின்ஸ்பெரி பகுதியில் வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

DSC03663 DSC03671

விபத்தில் காயமடைந்தவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here