பத்தனை பகுதியில் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 4 கைது!!

0
141

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை ஜயசிரிபுர பகுதியில் வீடு ஒன்றின் கொள்ளப்புறத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட அவிசாவளை ருவான்வெல்ல பகுதியை சேர்ந்த நால்வரை பத்தனை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை 04.05.2018 அன்று மாலை இடம்பெற்றதாக பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

பத்தனை ஜயசிரிபுர பகுதி வீடு ஒன்றில் பின்புறத்தில் அவிசாவளை ருவான்வெல்ல பகுதியில் இருந்து வருகை தந்திருந்த நான்கு நபர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து மாணிக்ககற்கள் அடங்கிய மண்களை கொண்டு வந்து அதனை குறித்த வீட்டின் பின்பகுதியில் இரகசியமான முறையில் மாணிக்ககற்களை அகழக்கூடிய உபகரணங்களை வைத்துக்கொண்டு மாணிக்ககற்களை பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பத்தனை பொலிஸார் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டு சந்தேக நபர்களை மாணிக்ககற்கள் அகழும் உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.

DSC06836 DSC06838

கைது செய்யப்பட்ட இவர்களிடம் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்பு 05.05.2018 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here