பனிஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சூன் பாண் முச்சக்கர வண்டிக்கு அருகில் சென்ற நான்கரை வயதான சிறுவனை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் தூக்கி நிலத்தில் அடித்ததில் காயமடைந்த சிறுவன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலையின் மருத்துவர் சம்பவம் குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 40 வயதானவர் என பொலிஸார் கூறியுள்ளனர். தம்புள்ளை கண்டலம பிரதேசத்தில் உள்ள வீட்டில் சிறுவன் தனது பெற்றோர் மற்றும் பாட்டனாருடன் இருக்கும் போது வீதியில் சூன் பாண் வண்டியின் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து சிறுவன் பனிஸ் கொள்வனவு செய்வதற்காக பாட்டனாரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீதிக்கு அருகில் சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த நபர் சிறுவனை திட்டியுள்ளதுடன் பனிஸை கொள்வனவு செய்ய எங்கியிருந்து பணம் கிடைத்தது என கேட்டு, சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் சமிலா குமார ரத்நாயக்க முன்னிலையில் நேர்நிலைப்படுத்த்பட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைககப்பட்டுள்ளார்.
தம்புள்ளை கண்டலம கெப்பெல பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.