நான் செய்த பணிகள் அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது’ என்று சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவர் மற்றொருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அது சரிதானா என்று சசிகலாவிடம் கேட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு சசிகலா தரப்பினர் நாங்கள் அவர்களை கண்டித்துவிட்டோம் என்று கூறினர்.
வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சசிகலா அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என பேட்டி கொடுத்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக நான் ஒரு புறம் பிரதமரை பார்க்க சென்ற போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதே கோரிக்கை வைத்தார் என்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
மேலும் தனது ராஜினாமா கடித்தை சசிகலாவிடம் கையளித்துவிட்டு வந்த பின்னரே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கல்லறையில் அமர்ந்தார் என தெரிய வருகிறது.