பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படவுள்ள பாரிய அபராதம்

0
50

நாட்டில் தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாய் வருமானம் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை 10,000 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here