பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

0
36

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உயர்தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here