அச்சிடப்பட்ட பிரதியொன்று பரீட்சார்த்திகளின் வசம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் இணையத்தளத்தில் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடசாலையில் அதிபர் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தாங்களாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதியொன்று பரீட்சார்த்திகளின் வசம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.