நாளைய தினத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஓராண்டு பூர்த்தி

0
53

சமூக ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு அறிவித்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பமானது.கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு நாளைய தினத்துடன் ஒரு ஆண்டு பூர்த்தியாக உள்ளது.

முழு நாடு கொழும்புக்கு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துக்கொள்ள நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து மக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி காலை கொழும்பில் ஒன்றுக்கூடினர்.

சமூக ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு அறிவித்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பமானது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி கோட்டா கோ கம என்ற பெயரில் காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் மே மாதம் 9 ஆம் திகதி வேறு திசை நோக்கி திரும்பியது.

காலிமுகத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போராட்டம் வலுவடைந்தது.

இதனையடுத்து எரிபொருள், சமையல் எரிவாயு, உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக கஷ்டங்களை எதிர்நோக்கிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இதனடிப்படையில் ஜூன் 9 ஆம் திகதி பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்னர் பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து ஜூலை 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்த போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தங்களை கொடுத்தனர்.

இதன் காரணமாக நாட்டில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13 ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இது இலங்கை வரலாற்றில் என்றும் நடந்திராத அரசியல் அதிகார புரட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here