பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவிப்பு!

0
120

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(01.06.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் தோற்றி சித்தி எய்திய மற்றும் சித்தி எய்தாத மாணவர்கள் எவரும் தோல்வியடைந்தவர்கள் அல்ல.

சித்தி எய்தா மாணவர்கள் மீளவும் பரீட்சைக்குத் தோற்ற முடியும். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

மூன்று பாடங்களிலும் சித்தி எய்தத் தவறிய மாணவர்கள் உயர்தரத்திற்கு பதிலாக டிப்ளோமா கற்கை நெறி ஒன்றைத் தொடரலாம்.

அந்த டிப்ளோமா கற்கைநெறியின் பெறுபேற்றின் அடிப்படையில் பட்டமொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here