பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தை- காலியில் இடம்பெற்ற சோகம்

0
75

தென்னிலங்கையில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 12ஆம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

தாய் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிய இன்னும் 4 நாட்களே இருந்துள்ளன.தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அதனை மறைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், மகனின் பரீட்சை நிறைவடைந்துள்ளதுடன், அதுவரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here