பருப்பு கீரையில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும் !!

0
24

பருப்பு கீரையில் உள்ள மிகுதியான நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்று போட்டு வந்தால் தலைவலி தீரும். மேலும் இரைப்பையில் அதிகமாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது.

பருப்பு கீரை பிள்ளை பெற்ற பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது. ரத்தத்தை சுத்தமாக்கும் இது நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது.

பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். தொடர்ந்து பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் ஏற்படாது.

கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் பருப்புக் கீரையை நன்கு அரைத்து மேல் பூச்சாகத் தடவி வந்தால், வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்பளங்கள் கொப்பளங்கள் மறைந்து உடல் குளிர்ச்சியாகும்.

பருப்பு கீரையில் ஒமேகா 3 என்னும் சத்து அதிகம் உள்ளது. மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here