சிவனொளிபாதமலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருகின்றது.பருவ காலம் இல்லாத காலப்பகுதியில் அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
அதன்படி, பருவகாலத்தில் மட்டுமே சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்ட செயலாளர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” அனுமதியின்றி பருவகாலம் அற்ற காலப்பகுதியில் கூட சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபட முடியும் என அனாமியாய் நாட்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல .
2022ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான சிவனொளிபாத மலை பருவகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் அனுமதியின்றி ஹட்டன் வீதி மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாகவும் சிவனொளிபாத மலைக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் போது , உரிய நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று நல்லத்தண்ணி மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருகின்றது.
அங்கு செல்லும் படிகளில் பாரிய நீரோடை ஓடுவதாலும் சிவனொளிபாதமலைக்கு செல்வது ஆபத்தானது.” என தெரிவித்துள்ளார்.